வஹ்ததுல் வுஜுத் : என்றால் உள்ளதை ஒன்றாக்கி வைத்தல் அல்லது இவ்வுலகில் அல்லாஹ்வைத் தவிற வேறொன்றும் இல்லை, நாம் காணும் யாவும் அல்லாஹ் ஒருவனே அவனே அனைத்துமாக இருக்கிறான் என்பதாகும். இந்த தத்துவத்தின் பின்னனியில் உருவான கொள்கையே வஹ்த்துல் வுஜுத் எனும் அத்வைதம் ஆகும. இது முற்றிலும் இஸ்லாத்திற்கு புறம்பான கொள்கையாகும் என்பதை குர்ஆன் ஹதிஸ்களினூடாக புறிந்து கொள்ளலாம்.
அத்வைதத்தின் முதல் ஆதாரம் :
“யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே பிந்தியவனும் அவனே பகிரங்கமானவனும் அவனே அந்தரங்கமானவனும் அவனே” (57- 03 )
அத்வைதம் பேசக்கூடியவர்கள் எடுத்து வைக்கும் தலையாய ஆதாரமாக இது இருக்கிறது இதற்கு அவர்களின் விளக்கம் இதோ : அல்லாஹ் ஆரம்பமானவன் என்றால் உலகைப்படைக்கும் முன் அவனையன்றி இவ்வண்டத்தில் எதுவுமில்லை , அவனில் இருந்தேயல்லாமல் எந்த ஒரு படைப்பும் படைக்கப் பட்டிருக்க முடியாது எனவே படைப்புகள் அனைத்தும் அவனுடைய பிரதிபளிப்பேயன்றி வேறில்லை என்பதினூடாக எல்லாம் அவனே என்ற தத்துவத்தை முன் வைக்கிறார்கள்
இவர்களுடைய இந்த விளக்கம் தவறானது என்பதை பின்வரும் சில அடிப்படைகள் மூலம் புரிந்து கொள்ளலாம்
முதல் அடிப்படை :
திருமறையில் (படைப்பாளன்) அல்லாஹ்வும் அவன் படைப்புகளும் வேறானவை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.
“உங்களை அல்லாஹ்தான் மன்னிலிருந்து படைத்தான்” (35-11)
“மேலும் எல்லா உயிர்ப்பிராணிகளையும் அல்லாஹ் நீரில் இருந்து படைத்துள்ளான்” (24-45)
“நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமான ஒரு அளவின் படியே படைத்துள்ளோம்” (54-49)
இது போன்ற வசனங்கள் படைப்பாளனையும் படைப்புகளையும் வேறுபடுத்திக் காட்டும் போது இவர்களால் எல்லாம் அவனே என்ற தத்துவத்தை தங்களின் மனோ இச்சைப்படி சொல்கிறார்களே தவிற வேறில்லை ...
இரண்டாவது அடிப்படை :
திருறையில் அல்லாஹ் தனக்குறிய பன்புகளைக் கொண்டு தன்னை அறிமுகப்படுத்துவது போன்று இந்த வசனத்திலும் அவனுக்குறிய பன்புகளையே குறிப்பிடுகிறான் ஆகவே அத்வைத வாதிகளால் ஆதாரமாக எடுத்து வைக்கப்படும் மேற்படி வசனத்திற்கு இவர்களால் கொடுக்கும் வலிந்துரை நிச்சயம் தவறானதே.
உதாரணம் :
“அவன் நித்திய ஜீவன் என்றும் நிலைத்திருப்பவன்” (03-02)
நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன் மிகைத்தவன் (11-65)
இவ்விரு வசனங்களில் அல்லாஹ் தன்னை நிலையானவன், வல்லமை மிக்கவன் என்ற பண்புகளில் குறிப்பிட்டுக்காட்டுகிறான் முன்னைய வசனமும் அவனுடைய பண்புகளையே சொல்லித்தருகிறது என்பதை புரிந்து கொள்ள தவறி விட்டார்கள்.
எனவே மேற்படி வழிந்துரை கொடுக்கப்பட்ட வசனத்தை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது :
** யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே: அவனுக்கு முன் எதுவும் இல்லை என்றும்
** பிந்தியவனும் அவனே : அவனுக்கு பின்னர் எதுவும் இல்லை என்றும்
** பகிரங்கமானவனும் அவனே : தன்னுடைய வசனங்கள், அத்தாட்சிகள் மூலமும் பகிரங்கமானவன் அவனே.
** அந்தரங்கமானவனும் அவனே: இவ்வுலகில் எவரும் பார்க்க முடியாதலவில் மறைக்கப்படிருப்பவனும் அவனே.
இந்த அடிப்படையில் சாதாரணமாக யாவரும் புறிந்து கொள்ளும் வசனத்தைக் தங்களின் கொள்கைக்கு ஏற்றவாறு கருத்தை மற்றி வைத்திருப்பது மட்டுமன்றி அவ்வசனத்திற்கு முன்னும் பின்னும் உள்ள வசனங்கள் அல்லாஹ்வையும் அவனது படைப்புகளையும் வேறு படுத்திக் காட்டி அத்வைதத்தை மறுத்துக் கொண்டிருப்பதை கவனிக்கவும் தவறி விட்டனரை்.
அத்வைதம் பேசுபவர்களால் தங்களின் கொள்கைக்கு ஆதாரமாக எடுத்து வைக்கப்படும் வசனங்களே அவர்களின் கொள்கைக்கு எதிராக வந்தமைந்துவிடுகின்ற நிலமையை இன்ஷாஅல்லாஹ் எமது எதிர் வரும் மறுப்புகளில் காணலாம். அத்வைதம் பற்றி அறிமுகத்திற்காக ஒரு ஆதாரத்துடன் இக்கட்டுரையை முடித்துக் கொள்கிறேன் . எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் உண்மையை ஏற்றுக் கொள்ளும் உள்ளத்தையும் தந்தருள்வானாக!
இன்ஷா அல்லாஹ் தொடரும் ................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துக்களை அனைவருக்கும் புரியும் விதமாக தெளிவாகவும் தமிழில் பதியவும். கீழ்த்தரமான வார்த்தைகளை தவிர்க்கவும்