வஹ்ததுல் வுஜுத் : உள்ளதை ஒன்றாக்கி வைத்தல் என்பதாகும் அதாவது இவ்வுலகில் அல்லாஹ்வைத் தவிற வேறொன்றும் இல்லை, நாம் காணும் யாவும் அல்லாஹ் ஒருவனே அவனே அனைத்துமாக இருக்கிறான் என்பதாகும். இந்த தத்துவத்தின் பின்னனியில் உருவான கொள்கையே வஹ்ததுல் வுஜுத். இது முற்றிலும் இஸ்லாத்திற்கு புறம்பான கொள்கையாகும் என்பதை குர்ஆன் ஹதீஸ்களினூடாக மக்களுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில் இந்த வலைத்தளம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது

சனி, 16 நவம்பர், 2013

கலிமாவை இலக்கணப்படிதான் அர்த்தம் கொள்ளவேண்டுமா

இஸ்லாத்தின் அடிப்படைக் கலிமா ‘‘லாயிலாஹ இல்லல்லாஹ்’’ என்பதற்கான அர்த்தம் என்ன ? அதற்கான விளக்கம் என்ன? என்பதில் தற்காலத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றியிருக்கின்றன.

1- கலிமாவின் உண்மை பொருளை விளங்குவதற்கு குர்ஆனும் நபியவர்களின் விளக்கங்களும் போதும் என்று சொல்லக்கூடிய நாம் (உண்மையாக வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை ) என்றும்

2- கலிமாவை விளங்கிக் கொள்ள குர்ஆன் கதிஸ்களை விட இலக்கணமே அவசியம் என்று சொல்லக்கூடியவர்கள் ( அல்லாஹ் அல்லாத வேறொன்றும் இல்லை ) எல்லாம் அவனே என்றும் கருத்துச் சொல்கின்றனர்.

அடிப்படைக் கொள்கையில் இரு வேறு பட்ட கருத்துக்கள் இருக்க சாத்தியமில்லை அப்படி இருக்குமானால் இரு கருத்துக்களில் ஒன்றே சத்தியம் மற்றது அசத்தியம் என்பதில் ஐயமில்லை எனவே அசத்தியத்தில் இருந்து சத்தியத்தை பிரித்தரிவது எப்படி ?

இஸ்லாமிய அழைப்புப்பனியை மேற்கொண்ட நபியவர்கள் உம்மி நபி என்பதையும் அன்னலரின் போதனைகளை ஏற்றுக் கொண்ட ஸஹாபாக்கள் கலிமாவை புரிந்து கொள்ளும் விடயத்தில் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருக்க வில்லை என்பதையும் கவணத்தில் கொண்டு விடயத்தை அனுகுவோம்

அசத்தியத்தில் இருப்பவர்களைப்பற்றி அல்லாஹ் சொல்கிறான்

1- எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (4-115)

2- மேலும், எவன் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கிறானோ அவனுக்கு அதற்காக எவ்வித ஆதாரமும் இல்லை அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடம்தான் இருக்கிறது நிச்சயமாக காஃபிர்கள் வெற்றி அடைய மாட்டார்கள். (23 - 117)

மேற்படி நபிகளாரின் போதனைகளையும் இத்திருமறை வசனங்களையும் அடிப்படையாக கொண்டு அசத்திய வாதிகளின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம் அதில்

முதல் விடயம் : அசத்திய வாதிகளிடம் தங்களின் கொள்கைக்கு ஆதாரம் இருக்காது

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே இதுவே பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லக்கூடியதாக உள்ளது.
அதன் அடிப்படையில் கலிமா ( லா இலாஹ் இல்லல்லாஹ் ) என்பதற்கு அர்த்தம் சொல்லுாம் விடயத்தில் நாம் கொண்டிருக்கும் பிரச்சினைக்கு அவ்விரண்டுமே தீர்வு சொல்ல வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை

அந்த வகையில் ( அல்லாஹ்வை அன்றி உண்மையாக வணக்கத்திற்குரிய நாயன் யாரும் இல்லை ) என்பதே குர்ஆன் ஹதீஸ்கள் சொல்லும் விளக்கமாகும் என்று ஆதாரங்களின் அடிப்படையில் சொல்லி வருகிறோம்.
எனவே கலிமாவிற்கு அர்த்தத்தை எவர் குர்ஆன் ஹதீஸ்களில் இருந்து கொண்டு வர வில்லையே அவர்கள் வழி கேட்டில் உள்ளார்கள் என்பதை குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது.

இரண்டாவது விடயம் : ‘‘ நபியவர்களினதும் அவர்கள் வழியில் நடந்த முஃமின்களினதும் வழியை விட்டும் தூரமாயிருப்பார்கள்

அதாவது நபியவர்களோ ஸஹாபாக்களோ அவர்களின் வழிகாட்டல் நடந்த முஃமின்களோ இவர்களில் யாராவது கலிமாவிற்கான விளக்கத்தை இலக்கணத்தின் அடிப்படையில்தான் சொன்னார்களா ? நிச்சயமாக இல்லை ஆக நேரான வழியை விட்டும் தடம் புரண்டவர்கள் யார் ?? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்

மூன்றாவது விடயம் : ‘‘ நேர் வழி இன்னதுதான் என்று சொல்லப்பட்ட பின்னரும் நாம் சொல்வதே சரி என்று தம் மனோ இச்சைக்கு கட்டுப்படுவார்கள்

இன்று கலிமாவின் விளக்கம் (அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குரிய கடவுள் வேறில்லை) என்பதை குர்ஆன் கதீஸ்களின் அடிப்படையில் நாம் எடுத்துக்காட்டியும் எதையும் பொருட்படுத்தாமல் தான் சொல்லும் விதத்தில் மட்டுமே அர்த்தம் எடுக்கப்பட வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருக்கிறார்கள்

இவர்களைப்பற்றி அல்லாஹ் சொல்லும் போது ‘‘ அவர்களை அவர்களின் வழியிலேயே செல்லவிட்டு அப்படியே நரகத்தில் கொண்டு சேர்ப்போம் என்பதாக கூறுகிறான்.

இதன் பின்னும் இவர்கள் புத்துணர்வு பெற வில்லை என்றால் அவர்களின் நேர்வழிக்கு அல்லாஹ்வே போதுமானவன்

இருந்து அவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகளை முன் வைப்போம் சிந்தித்து பதில் தருவார்கள் என்ற நம்பிக்கையில்
1- கலிமா என்பது திருமறை வசனங்களின் ஒரு பகுதியே ஆகம் திருமறை வசனம் ஒன்றுக்கு திருமறையின் மற்றய வசனங்கள் விளக்கமாக இருக்காதா ? விளக்கமாக இருக்கும் பட்சத்தில் ஏன் அந்த விளக்கத்தை நாம் முற்படுத்தக்கூடாது

2- கலிமாவிற்கான அர்த்தம் குர்ஆன் கதீஸை விட இலக்கண ரீதியில்தான் புரிந்து கொள்ளப்படும் என்றால் அந்த முறையை நபியவர்கள் காட்டித்தந்தார்களா ?

3- ஸஹாபாக்கள் மற்றும் நல் வழி நடந்த முஃமின்கள் இலக்கணத்தைக் கொண்டுதான் கலிமாவின் அர்த்தத்தை புரிந்து கொண்டார்களா ?
4- எல்லாவற்றுக்கும் மேலாக கலிமாவை (திருமறை வசனங்களை) புரிந்து கொள்ளும் முறைகளில் இலக்கண அடிப்படையே முதன்மையானது என்று எங்கையாவது சொல்லப்பட்டுள்ளதா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை அனைவருக்கும் புரியும் விதமாக தெளிவாகவும் தமிழில் பதியவும். கீழ்த்தரமான வார்த்தைகளை தவிர்க்கவும்