வஹ்ததுல் வுஜுத் : உள்ளதை ஒன்றாக்கி வைத்தல் என்பதாகும் அதாவது இவ்வுலகில் அல்லாஹ்வைத் தவிற வேறொன்றும் இல்லை, நாம் காணும் யாவும் அல்லாஹ் ஒருவனே அவனே அனைத்துமாக இருக்கிறான் என்பதாகும். இந்த தத்துவத்தின் பின்னனியில் உருவான கொள்கையே வஹ்ததுல் வுஜுத். இது முற்றிலும் இஸ்லாத்திற்கு புறம்பான கொள்கையாகும் என்பதை குர்ஆன் ஹதீஸ்களினூடாக மக்களுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில் இந்த வலைத்தளம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது

செவ்வாய், 12 நவம்பர், 2013

கலிமா விளக்கம்

(لا إله إلا الله )
என்பதன் பொருளும் விளக்கமும்
இக்கலிமாவுக்கு மூன்று முறைகளில் அர்த்தம் சொல்லப்படுகிறது

   -1அல்லாஹ்வை அன்றி உண்மையாக வணங்கப்படும் (கடவுள்) இல்லை

    2அல்லாஹ்வை அன்றி வழிபாட்டிற்குறியவை இல்லை

  3அல்லாஹ்வை அன்றி இரட்சகன் இல்லை

இம்மூன்று அர்த்தங்களில் சரியானதும் மிகச்சிறந்ததும் முதலில் உள்ளதாகும். இக்கருத்தையே அல் குர்ஆன் பல இடங்களில் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறது



( குறிப்பு 

கலிமாவிற்கான விளக்கம் திருமறையில் கிடைக்கும் போது அது குறித்து தெரிந்து கொள்ள வேறு (தர்கீப் ) பக்கம் செல்வது அவசியமற்றதாகும்)

  (- உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.(1:4)


*- அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். (17:23)

  இது (ஏனெனில்); நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை (இறைவன்) மற்றும் அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அது பொய்யாகும்; இன்னும்; நிச்சயமாக அல்லாஹ் - அவனே உயர்ந்தவன், மிகவும் பெரியவன். (22:62)

இது போன்ற பல வசனங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எதனையும் வணக்கத்துக்குறியதாக (கடவுளாக) எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை உணர்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் தன் சமுகத்தாரைப் பார்த்து மக்களே (லா இலாஹ இல்லா அல்லாஹ் ) அல்லாஹ்வை அன்றி உண்மையாக வணங்கப்படுபவை இல்லையென்று சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள் வெற்றி பெருவீர்கள். என்று அழைப்பு விடுத்த போது அம்மகளால் நபியவர்கள் பல எதிரப்புகளை சந்திக்க வேண்டி இருந்தன, காரணம் (லா இலாஹ இல்லா அல்லாஹ்) என்பதன் பொருளையும் அதன் தத்துவத்தையும் அன்றைய காபிர்கள் அறிந்து வைத்திருந்ததேயாகும்.

மரம், செடி, கொடி, கற்கள் மற்றும் சிலை வணக்கமென எதன் மீது தங்களின் மூதாதையர்கள் இருந்து வந்தார்களோ, அவர்களினுடைய வழிமுறையை முற்றிலும் எதிர்ப்பதாக இவருடை மாரக்கம் இருக்கிறது என்பதை காரணம் காட்டியே அன்றைய காபிர்கள் அன்னலரை எதிர்த்தார்கள்.

இது பற்றி அல்லாஹ் தன் திருமறையில்

  "ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?" என்றும் அவர்கள் கூறுகிறார்கள். (37- 36)

  (அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர் ''இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்'' என்றும் காஃபிர்கள் கூறினர். ''இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்). (38:4-5)

முஹம்மத் (ஸல் ) அவர்களுடைய கொள்கை தம்முடைய தெய்வங்களை பொய்பிக்கக்கூடியதாக வணக்கங்கள் யாவும் ஓரே இறைவனான அல்லாஹ்வுக்கு மாத்திரமே செலுத்தப்பட வேண்டுமென சொல்லக்கூடியதாக உள்ளது என்பதை புரிந்து கொண்டதன் காரணமாகவே அக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் முழுமையாக சிலை வணக்கங்களை விட்டும் தூரமாகி தங்களின் முழு வணக்கங்களையும் தூய்மையான முறையில் அல்லாஹ்வுக்கு மாத்திரமே என்று ஆக்கிக் கொண்டனர்

அவ்வாறில்லாமல் (லா இலாஹ இல்லா அல்லாஹ் ) என்பதன் அர்த்தம்
அல்லாஹ்வை அன்றி இறட்சகன் இல்லை எல்லாம் அவனே என்று புரிந்து வைத்திருந்தால் நிச்சயமாக நபி (ஸல்) அவர்களின் அழைப்பிற்கு அவர்கள் எவ்வித எதிர்ப்பையும் காட்டிருக்க மாட்டார்கள்

ஏனெனில் அல்லாஹ்வே தங்களின் இரட்சகன் அவனே படைப்பாளன் அனைத்தும் அவனிடமிருந்தே உள்ளது என்று, அக்காபிர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அத்துடன் சிலைகள், மரங்கள், நல்லடியார்கள், மலக்குகள், போன்றவைகளை தங்களின் துணைவர்களாகவே எடுத்துக் கொண்டனர். காரணம் அவைகள் தங்கள் இரட்சகனிடத்தில் தங்களுக்காக பரிந்து பேசும் என்று நினைத்துக் கொண்டதனாலாகும். இதையே குர்ஆன் இனை வைப்பு என்கிறது.

இதனை பின் வரும் வசனம் சுட்டிக் காட்டுகின்றது
*- (அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ''அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை'' (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். 39:3

அன்றை காபிர்கள் தங்களின் இறை கொள்கையில் கொண்டிருந்த தவறான விளக்கங்களைச் சுட்டிக்காட்டும் மேட்படி வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் அழைப்புப்பணியும் (லா இலாஹ இல்லா அல்லாஹ் )என்ற கலிமாவின் சரியான அர்த்தம் அல்லாஹ்வையன்றி உண்மையாக வணக்கத்துக்குறிய கடவுள் வேறில்லை என்பதையே சுட்டிக்காட்டி நிற்கிறது.

எனவே குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் புரியப்பட்ட அர்த்தத்தை விட்டும் எவர் தூரமாகின்றாரோ நிச்சயமாக அவர்கள் தங்களின் மனோ இச்சைக்கு கட்டுப்படுகிறார்கள் என்பதை தவிர வேறில்லை

இவர்களைப்ற்றி அல்லாஹ் சொல்கிறான்
(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? (45- 23)

எனவே
لا إله إلا الله
என்பதற்கு அல்லாஹ்வை அன்றி உண்மையாக வணங்கப்படுபவை இல்லை என்ற கருத்தையும் விளக்கத்தையும் தவிறவுள்ள அனைத்தும் நிராகரிக்கப்பட வேண்டியதே

எல்லா புகழும் அல்லாவுக்கே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை அனைவருக்கும் புரியும் விதமாக தெளிவாகவும் தமிழில் பதியவும். கீழ்த்தரமான வார்த்தைகளை தவிர்க்கவும்