வஹ்ததுல் வுஜுத் : உள்ளதை ஒன்றாக்கி வைத்தல் என்பதாகும் அதாவது இவ்வுலகில் அல்லாஹ்வைத் தவிற வேறொன்றும் இல்லை, நாம் காணும் யாவும் அல்லாஹ் ஒருவனே அவனே அனைத்துமாக இருக்கிறான் என்பதாகும். இந்த தத்துவத்தின் பின்னனியில் உருவான கொள்கையே வஹ்ததுல் வுஜுத். இது முற்றிலும் இஸ்லாத்திற்கு புறம்பான கொள்கையாகும் என்பதை குர்ஆன் ஹதீஸ்களினூடாக மக்களுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில் இந்த வலைத்தளம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது

சனி, 9 நவம்பர், 2013

அல்லாஹ்வே எல்லாமாயும் இருக்கிறானா

அத்வைதம் பேசும் நம் சகோதரர்கள் தங்களின் கொள்கையை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் எடுத்துக் கொள்வதை விட்டும் தூரமாகி தங்களின் மனோ இச்சைப்படியின் அடிப்படையில் தங்களுக்கென ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள்

அதில் ஒன்றுதான் கலிமா ( லா இலாஹ இல்ல அல்லாஹ் ) என்பதற்கான விளக்கம் ஆகும். அல்லாஹ்வை அன்றி கடவுள்கள் இல்லை , அல்லாஹ்வே எல்லாமாயும் அவன் இருக்கிறான் எல்லாம் அவனே எனும் தத்துவத்தை கலிமாவிற்கான விளக்கம் என்று அவர்களால் முன் வைக்கப்படுகிறது

மேற்படி அரத்தத்தை அரபு இலக்கண (தர்கீப் ) சட்டப்படியே கொடுத்துள்ளார்கள் என்பதை அவர்களின் எழுத்துகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த வழிமுறையைதான் இஸ்லாம் காட்டித்தருகிறதா ? இதன் அடிப்படையில்தான் விளக்கங்கள் கொடுக்கப்பட வேண்டுமா ?

இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆன் மற்றும்
ஹதீஸ்களே இவ்விரண்டிற்கும் விளக்கங்கள் சொல்லப்படுவதற்கென்று நமது முன்னோர்களால் சில வழி முறைகளும் ஒழுங்குகளும் காட்டித்தரப்பட்டுள்ளன. அந்த வகையில் தப்ஸீரினுடைய உலமாக்களால் குர்ஆனிய வசனங்கள் எவ்வாறு விளக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை (அடிப்படைகளை) மிக தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள்

எனவே அத்வைத வாதிகளால் கலிமாவிற்கு சொல்லப்படும் விளக்கமானது குர்ஆனை விளக்குவதற்கான வழிமுறையில் உள்ளதுதானா ? என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என்பதே விடையாக இருக்கும்.

குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கப்படும் வழிமுறைகள் அதில் முற்படுத்தப்பட வேண்டிய ஓழுங்கு முறைகளும்.

1- குர்ஆனிய வசனம் ஒன்றுக்கு முதல் முதலாக குர்ஆனில் இருந்தே விளக்கம் சொல்லப்பட வேண்டும் குர்ஆனில் விளக்கம் கிடைக்க வில்லையானால்

2- இரண்டாவதாக ஹதீஸ்களைக் கொண்டு விளக்கம் சொல்லப்பட வேண்டும் ஹதீஸ்களில் விளக்கம் இல்லாத போது

3- அடுத்ததாக ஸஹாபாக்களின் கூற்றுகளைக் கொண்டு விளக்கம் கொடுக்கப்படல் வேண்டும் ஸஹாபாக்களிடத்திலும் கிடைக்க வில்லையானால்

4- தாபியீன்களிடம் அல்லது தலைசிறந்த உலமாக்களிடம் இருந்து விளக்கம் சொல்லப்பட வேண்டும் அதுவும் கிடைக்க வில்லையானால்

5- அரபு இலக்கணங்கள் நன்கு அறிந்த விளக்கமுள்ளவரிடத்தில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்.

இதுவே குர்ஆனுக்கு விளக்கம் சொல்லப்படும் வழிமுறைகளாகும்.
இதன் அடிப்படையில் அத்வைத வாதிகளின் விளக்கம் சொல்லும் முறையை பார்க்கும் போது முதல் நான்கு நிபந்தனைகளையும் கண்டுக்காமல் இருதியான வழி முறைப்படியே அர்த்தம் கொடுக்கிறார்கள் . என்பது தெளிவானதொரு விடயமாகும்
இதற்கு காரணம் அவர்களின் மனோ இச்சைதான் என்பதில் எல்லளவும் சந்தேகம் இல்லை.

முன்னைய உலமாக்களின் அல்லது ஸஹாபாக்களின் வழி முறையில் குர்ஆனுக்கு அவர்களால் விளக்கம் சொல்லப்படும் போது தங்களின் கொள்கைக்கு அது வேட்டாக அமையும் என்பதனாலேயே இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் ஆகவே தெளிவான வழிகேட்டில் சென்று கொண்டிருக்கும் அவர்களின் கொள்கை இஸ்லாம் அல்ல என்பதை நாம் கவணத்தில் கொள்ள வேண்டும்

இன்ஷா
அல்லாஹ் மற்றும் ஒரு பதிவில் கலிமாவிற்கான சரியான அர்த்தம் என்ன என்பதை குர்ஆனிய வசனங்கள் கொண்டே விளக்குவோம்.

தொடரும் .........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை அனைவருக்கும் புரியும் விதமாக தெளிவாகவும் தமிழில் பதியவும். கீழ்த்தரமான வார்த்தைகளை தவிர்க்கவும்