வஹ்ததுல் வுஜுத் : உள்ளதை ஒன்றாக்கி வைத்தல் என்பதாகும் அதாவது இவ்வுலகில் அல்லாஹ்வைத் தவிற வேறொன்றும் இல்லை, நாம் காணும் யாவும் அல்லாஹ் ஒருவனே அவனே அனைத்துமாக இருக்கிறான் என்பதாகும். இந்த தத்துவத்தின் பின்னனியில் உருவான கொள்கையே வஹ்ததுல் வுஜுத். இது முற்றிலும் இஸ்லாத்திற்கு புறம்பான கொள்கையாகும் என்பதை குர்ஆன் ஹதீஸ்களினூடாக மக்களுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில் இந்த வலைத்தளம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது

சனி, 23 நவம்பர், 2013

கலிமாவிற்கான பொருள் அல்லாஹ்வை அன்றி வணக்கத்திற்கு உண்மையான கடவுள் எதுவும் இல்லை என்பதே !

கலிமாவிற்கான விளக்கம் என்ன என்பதில் இன்னும் தீர்க்கமான முடிவற்றவர்களாகவே நாம் இருக்கிறோம்

ஆனாலும் குர்ஆன் அதற்கான விளக்கத்தை மிக தெளிவாவே சொல்லி விட்டது. என்றாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எம்மிடம் இல்லை என்பதை குர்ஆனின் விளக்கத்தை விட்டும் தூரமாகும் போக்கு எடுத்துக்காட்டுகிறது.

அத்வைத வாதிகள்“ ஏற்றுக் கொண்டது போல் மக்கத்து காபிர்கள் லாத் உஸ்ஸா மனாத் போன்று இன்னும் பல சிருஷ்டிகளை வணக்கத்திற்குரிய கடவுளாக எடுத்துக் கொண்டார்கள் என்பதையும் இவ்வுலகின் இரட்சகனாக அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள் என்பதையும் யாரும் மறுக்க முடியாது இதுவே குர்ஆனின் கூற்றும் ஆகம் ...

அப்படி இருந்தும் ஏன் அல்லாஹ்வின் சிருஷ்டிகளை வணக்கத்திற்கான இலாஹுகலாக எடுத்துக் கொண்டார்கள் என்பதையும் குர்ஆன் சொல்கிறது

( இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், "அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை" (என்கின்றனர்). 39-3

ஆகவே இதன் மூலம் அல்லாஹ்வை அன்றி வணங்குவதற்கான கடவுள்கள் அன்றைய மக்களிடத்தில் இருந்தது என்பதை அவர்களும் மறுக்காத விடயமே ..

இப்போது திருமறை வசனத்திற்கு வருவோம்

1- "அல்லாஹ்வைத்தவிர நாயன் இல்லை" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர். (37- 35)

அல்லாஹ்வை அன்றி வேறு நாயன் இல்லை என்றதும் அந்த மக்களுக்கு இதன் அர்த்தம் என்ன என்பது புரிந்திருக்கும் இருந்தும் சந்தேகமற்ற தெளிவிற்காக பின் வரும் வசனம் அதனை விளக்குகிறது.

2- (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்" என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை. (25)

இந்த இடத்தில் சிந்தியுங்கள் அல்லாஹ்வை அன்றி வணக்கங்கள் செய்து கொண்டிருந்தவர்களிடத்தில் அல்லாஹ்வை அன்றி வணக்கத்திற்கு வேறு யாரும் இல்லை என்றால் என்ன புரிந்த கொள்வார்கள் ??

நமது பலதரப்பட்ட வணக்கங்களை வேறு பட்ட தெய்வங்களுக்காக கொடுத்துக் கொண்டிருந்தோம் அவை அனைத்தும் ஓரே இறைவனுக்குத்தான் செய்யப்பட வேண்டுமாம் . என்று சொன்னவர்கள்

இது ஒரு ஆச்சரியமான விடயமல்லவா என்பதையே வியந்து கூறினார்கள் என்பதை சாதாரணமாக யாவரும் புரிந்து கொள்வர்

ஆகவே மக்கா காபிர்களின் வாழ்க்கை முறை, நபியவர்களின் தஃவா முறை மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் நடை முறை அனைத்தும் நமக்கு தெளிவு படுத்துவது

கலிமாவிற்கான பொருள் அல்லாஹ்வை அன்றி வணக்கத்திற்கு உண்மையான கடவுள் எதுவும் இல்லை என்பதே !

இது தெளிவான அர்த்தமாக இருக்க ஏன் இலக்கணத்தின் பக்கம் நாம் செல்ல வேண்டும் அதற்காக தேவைதான் என்ன ??

வஹ்ததுல் வுஜூத் கொள்கைக்கான ஆதாரங்களும் அதற்கான பதில்களும்

இஸ்லாமும் அதற்கெதிரான கருத்துக்களும்
1 - வஹ்தத் அல் வுஜுத்
வஹ்ததுல் வுஜுத் : உள்ளதை ஒன்றாக்கி வைத்தல் என்பதாகும் அதாவது இவ்வுலகில் அல்லாஹ்வைத் தவிற வேறொன்றும் இல்லை என்றும் நாம் காணும் யாவும் அல்லாஹ் ஒருனே அவனே அனைத்துமாக உருவெடுத்திருக்கிறான் என்றும் கூறி வருகிறது. இந்த தத்துவத்தின் பின்னனியில் உருவான கொள்கையே வஹ்த்துல் வுஜுத் ஆகும். இது முற்றிலும் இஸ்லாத்திற்கு புறம்பான கொள்கையாகும் என்பதை குர்ஆன் கதீஸ் ஒளியினூடாக புறிந்து கொள்ளலாம்.

இக் கொள்கையைச் சார்ந்தவர்கள் இஸ்லாம் என்ற பெயரில் பல நச்சுக்கருத்துக்களை முன் வைத்து வருகிறார்கள் அக் கருத்துக்கள் உருவாவதற்கு அடிப்படையாக இருக்கும் “எல்லாம் அவனே” என்ற தத்துவத்திற்கு அவர்களால் முன்வைக்கப்டும் ஆதாரங்களையே இவ்விடத்தில் அலச இருக்கிறோம்

வஹ்ததுல் வுஜூத் கொள்கைக்கான ஆதாரங்களும் அதற்கான பதில்களும்
எல்லாம் அவனே என்ற தத்துவத்திற்கு அவர்களால் முன் வைக்கப்படும் அனைத்து ஆதாரங்களையும் ஆய்வுக்குற்படுத்தும் போது இக்கட்டுறை விறிவடைந்து செல்லும் என்பதனால் முக்கிய சில ஆதாரங்களை எடுத்துக்கொள்வது கொண்டு போதுமாக்கிக் கொள்கிறேன்

முதல் ஆதாரம் : “யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே பிந்தியவனும் அவனே பகிரங்கமானவனும் அவனே அந்தரங்கமானவனும் அவனே” (57- 03 )
அவர்களின் வாதம் : அல்லாஹ்தான் ஆரம்பமானவன் என்றால் உலகைப்படைக்கும் முன் அவனையன்றி இவ்வண்டத்தில் எதுவுமில்லை என்றிருக்க அவனில் இருந்தேயல்லாமல் எந்த ஒரு படைப்பையும் படைக்கப் பட்டிருக்க முடியாது எனவே படைப்புகள் அனைத்தும் அவனுடைய பிரதிபளிப்பேயன்றி வேறில்லை எனும் விளக்கத்தினூடாக எல்லாம் அவன் என்ற தத்துவத்தை முன் வைக்கிறார்கள்
இது தவிர்நத இன்னும் பல ஆதாரங்ளை அவர்கள் எடுத்து வைத்தாலும் எல்லாம் அவன் என்ற த்த்துவத்திற்கு தலையாய ஆதாரம் இதுவென்பதால் இவ்விடத்தில் இதனை மாத்திரம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம்.
இவர்களுடைய இந்த விளக்கத்தினை பல கோணங்களில் நோக்கலாம்
• திருமறையில் (படைப்பாளன்) அல்லாஹ்வும் அவன் படைப்புகளும் வேறானவை என்பதை தெளிவு படித்தும் ஆதாரங்கள் ஏறாலம் இருக்கிறது என்பதை அவர்களாலும் மறுக்க முடியாது அவைகளில் சில :

“உங்களை அல்லாஹ்தான் மன்னிலிருந்து படைத்தான்” (35-11)

“மேலும் எல்லா உயிர்ப்பிராணிகளையும் அல்லாஹ் நீரில் இருந்து படைத்துள்ளான்” (24-45)

“நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமான ஒரு அளவின் படியே படைத்துள்ளோம்” (54-49)

இது போன்ற இன்னும் பல ஏராலமான ஆதாரங்கள் படைப்பாளன் வேறு படைப்புகள் வேறு என்பதை தெட்டத் தெளிவாக பறைசாற்றிக் கொண்டிருக்க அல்லாஹ்வும் அவன் படைப்புகளும் ஒன்றே அல்லாஹ்தான் படைப்புகளாக இருக்கிறான் என்ற கருத்தை கண் மூடித்தனமாக சொல்லி வருகிறார்கள்

• மேற்படி அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம் (57-03) அல்லாஹ் அன்றி இவ்வுலகில் எதுவும் இல்லை என்ற கருத்தை அவர்கள் சொல்லிக்கொண்டாலும் உண்மை அதுவல்ல மாறாக திருறையில் அல்லாஹ் தன்னைப்பற்றி குறிப்பிடும் பல பன்புகளில் இதுவும் ஒரு பன்பாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பதே மிகச்சரியான அர்த்தமாகும்.
உதாரணம் :
“அவன் நித்திய ஜீவன் என்றும் நிலைத்திருப்பவன்” (03-02)

நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன் மிகைத்தவன் (11-65)

இவ்விரு வசனங்களில் அல்லாஹ்வுக்கு நிலையானவன், வல்லமை மிக்கவன் என்ற பண்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது போன்றே “எல்லாம் அவனே” என்ற கொள்கைக்கு அவர்களால் எடுத்துவைக்கப்படும் வசனமும் அவனுடைய பண்புகளையே சொல்லித்தருகிறது என்பதை புரிந்து கொள்ள தவறி விட்டார்கள்.

எனவே அந்த வசனத்தை பின் வருமாறே புரிந்து கொள்ள வேண்டும் :
** யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே: அவனுக்கு முன் எதுவும் இல்லை

** பிந்தியவனும் அவனே : அவனுக்கு பின்னர் எதுவும் இல்லை

** பகிரங்கமானவனும் அவனே : அவனுடைய வசனங்கள் மூலமும் அத்தாட்சிகள் மூலமும் பகிரங்கமானவன் அவனே.

** அந்தரங்கமானவனும் அவனே: பூமியில் அவனை எவரும் பார்க்க முடியாதலவில் மறைக்கப்படிருப்பவனும் அவனே

இவ்வாறு சாதாரணமாக யாவரும் புறிந்து கொள்ளும் வசனத்தைக் கூட அவர்களால் புறிந்து கொள்ள முடியாமல் தங்களின் கொள்கைக்கு ஏற்றவாறு வசனத்தின் கருத்தை மற்றி வைத்திருப்பது மட்டுமன்றி அவ்வசனத்திற்கு முன்னும் பின்னும் உள்ள வசனங்கள் அல்லாஹ்வையும் அவனது படைப்புகளையும் வேறு படுத்திக் காட்டுவதை கவனிக்கத் தவறி விட்டார்கள்.

இரண்டாம் ஆதாரம் : “நிச்சயமாக இவ் வேதம் உண்மையானதுதான் என்பது அவர்களுக்கு தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை பலகோணங்களிலும் அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் காட்டுவோம் ...” (41-53 )
எல்லாம் அவன் என்ற கொள்கைக்கு இரண்டாம் ஆதாரமாக இதனை அவர்கள் முன் வைத்த போதும் தங்களின் கருத்துக்கு எதிராகவே உள்ளது என்தை கண்டு கொள்ள தவறி விட்டார்கள்
• இந்த வசனத்தில் இருதரப்புகளுக்கிடைய நடக்கவிருக்கும் விடயம் பற்றியே பேசுகிறது
ஒன்று அத்தாட்சிகளைக் காட்டுபவன்: அல்லாஹ்
மற்றது அத்தாட்சிகள் காட்டப்படுபவர்கள்: மனிதர்கள்

இந்த சாதாரன வேறு பாட்டை புரிந்து கொள்ள முடியாததே இவர்களின் குழப்பத்திற்குறிய முக்கிய காரணமாகும் எந்த ஆதாரம் அவர்களின் கொள்கைக்கு எதிராகவுள்ளதோ அதனையே தங்களுக்குறிய ஆதாரமாக காட்ட நினைக்கும் பரிதாப நிலை அவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் கொள்கிறேன்

அவர்கள் இந்த வசனத்தை சரியாக புரிந்துகொள்ளும் பொருட்டு அவர்களுக்கு மற்றுமொரு வசனம் விளக்களிக்கிறது “அறிந்துகொள்ளுங்கள் நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்பது குறித்து சந்தேகத்தில் இருக்கின்றனர் நிச்சயமான அல்லாஹ் எல்லாவற்றையும் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்” (41-54)

“ எல்லாம் அவன் ” என்ற தத்துவம் சொல்வது போல் படைப்புகளும் இறைவன் என்றால் யார் யாரை சந்திப்பதில் சந்தேகம் கொண்டுள்ளனர் என்ற கேள்வி எழுகிறது இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் எழும் கேள்விகளுக்கு “எல்லாம் அவனே” என்ற தத்துவத்தை முன்வைப்பவர்கள் பதில் அளிப்பார்களா ?

சில கேள்விகள் இதோ ::
“நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள் உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினால் பின்பு அவனே உங்களை மரிக்கச் செய்வான்...” (2- 55)
1- எல்லாம் அவன் என்றால் இந்த வசனத்தில் யார் யாரை நம்ப மறுக்கின்றனர்
2- எல்லாம் அவன் என்றால் உயிரற்றவர்களாக இருந்து பின்னர் உயிரூட்டப்பட்டவர்கள் யார் ? யார் உயிர் ஊட்டியது பின்னர் மரனிப்பவர்கள் யார் ?
3- படைப்புகளும் அல்லாஹ் என்றால் அல்லாஹ் மரனிக்கிறானா ?
இவ்வாறு ஒன்றல்ல ஓராயிரம் கேள்விகளை அவர்களின் கொள்கைக்கு எதிராக முன் வைக்க முடியும் ஒன்றுக்கு அவர்களால் பதில்சொல்ல முடியாது அல்லாஹ் சொல்கிறான் “ உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள் என்று கூறுவோம் அப்போது அவர்கள் சத்தியமென்பது அல்லாஹ்வுக்கு சொந்தமானது என்றும் அவர்கள் இட்டுக்கட்டியவைகள் எல்லாம் அவர்களை இட்டும் மறைந்து விடும் என்று அறிந்து கொள்வார்கள்” (28-75)


வஹ்த்த் அல் வுஜுத் பற்றிய சிறியதொரு மறுப்பாக இதனை முன வைக்கிறேன் இதுதொடர்பாக மாற்றுக் கருத்துடையவர்கள் தங்களின் ஆதாரங்களை முன் வைத்துப் பேசுவார்களானால் அதற்கான தகுந்த பதில் வழங்ப்படும் என்பதை கூறிக்கொண்டு
உண்மை உள்ளபடி ஏற்றுக் கொள்ள அல்லாஹ் அனைவருக்கும் தௌபீக் செய்வானாக ! என்ற பிராத்தனையுடன் உங்களின் கருத்துகளை எதிர்பார்த்திருக்கிறேன் .... எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே

சனி, 16 நவம்பர், 2013

ஆதம் நபியின் கலிமா எப்படிஇருந்தது

லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் அர்த்தம் ( அல்லாஹ்வை அன்றி வணக்கத்திற்குறிய உண்மையான கடவுள் வேறில்லை ) என்பதே ஆகும் இதனையே குர்ஆன் மற்றும் ஹதீஸ்களினுடாக நாம் விளக்கி வருகிறோம்

இந்த அர்த்தம் மக்களிடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அத்வைதக் கொள்கைக்கு பெரும் ஆப்பாக அமைந்து விடும் என்பதால் மனமுரண்டாக எவ்வித ஆதாரங்களும் இன்றி அக்கருத்தை அத்வைதம் பேசுவோர் மறுத்து வரும் காட்சியை நாம் அவதானிக்க கூடியதாகவுள்ளது , இதற்காக அவர்களால் பல கேள்விகளும் முன் வைக்கப்படுகிறது.

அந்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவே இந்த கட்டுரையை துவங்குகிறேன்

முதல் கேள்வி ? வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை அன்றி வேறு கடவுள் இல்லை என்பதே கலிமாவிற்கான அர்த்தம் என்றால் நபி ஆதம் (அலை ) அவர்களின் காலத்தில் சிலை வணக்கம் இருக்க வில்லை என்பதை குர்ஆன் சொல்கிறது எனவே இந்த கலிமா அவர்களுக்கு பொருந்தாதே ! என்பது அவர்களின் கேள்விகளில் ஒன்று.

பதில் ‘‘ இந்த கேள்வியை பொருத்தவரையில் வாசிப்பதற்கு பொருத்தமான அறிவுக்கமைந்த கேள்வியாக தோற்றமளித்தாலும் இது போன்ற முர்க்கத்தனமான கேள்விகள் இருக்க முடியாது என்பதை இஸ்லாத்தின் வழிகாட்டலில் உரசிப்பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ‘‘ நான் உங்களிடத்தில் அஞ்சுவதெல்லாம் சிரிய இனை வைப்பே ஆகும் , அதற்கு ஸஹாபாக்கள் சிறிய இனை வைப்பு என்றால் என்னவென்று கேட்டார்கள் ? அதற்கு நபியவர்கள் அது முகஸ்தூதியாகும் ’’ என்று கூறினார்கள் ( அஹ்மத் )

இந்த ஹதீஸை அவர்களின் கேள்வியின் அடிப்படையில் விளங்குவோம் .. அன்றைய ஸஹாபாக்களுக்கு சிறிய இனை வைப்பு பற்றிய அறிவோ அல்லது அது அவர்கள் காலத்தில் இடம் பெறவோ இல்லை அப்படி இருக்க நபியவர்கள் ஏன் அது பற்றி எச்சரிக்கை செய்தார்கள்

கலிமாவின் விளக்கமான அல்லாஹ்வை அன்றி உண்மையாக வணக்கத்திற்குரிய கடவுள் இல்லை என்பதை விளக்குவதற்கு அன்றைய தருனத்தில் சிலை வணக்கம் இருந்துதான் ஆக வேண்டுமா ? அதாவது அல்லாஹ்வை அன்றி வேறொன்றும் வணங்ப்படக்கூடாது என்பதையும் வணக்கம் என்றால் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யப்பட வேண்டும் என்பதையும் சொல்வதற்கு அல்லாஹ் அல்லாத வேறொன்று வணக்கத்திற்குரியதாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கத்தான் வேண்டுமா .

ஆம் என்றால் நபியவர்கள் காலத்தில் முகஸ்தூதி சிறி இனை என்பது இல்லாதிருக்கும் போது எப்படி அவர்களால் மட்டும் அது பற்றி சொல்ல முடிந்தது ? சிந்திப்பீர்களா ? ஆகவே ஒன்று இல்லாதிருக்கும் நிலையில் அது பின்னால் ஏற்படும் என்ற சந்தர்ப்பம் இருக்குமானால் குறித்த விடயம் பற்றிய தெளிவை அன்றே வழங்கலாம் . அது கட்டாயமானதும் கூட.

எனவே இது போன்ற பல விடயங்கள் அன்றைய தினத்தில் இல்லாதிருந்தும் அது பற்றிய தெளிவை அதனோடு சம்மந்தமில்லாத மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள் என்றால் இதே விடயத்தை ஆதம் (அலை) அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்றோ அவ்வாறான ஒரு பொருப்பை அல்லாஹ் வழங்கியிருக்க மாட்டான் என்றோ இவர்கள் சொல்வார்களானால் இது அவர்களின் மனோ இச்சையேயன்றி வேறொன்றும் இல்லை.

அல்லாஹ் மாத்திரமே எல்லாவற்றுக்கும் கடவுளாக இருக்கும் போது அவனுக்கு செலுத்த வேண்டிய கடமை ஒன்றை அவனது படைப்புகளுக்கு செலுத்துவதே இனை வைத்தலாகும் அவ்வாறான இனை வைத்தல்களை இல்லாமல் செய்து தூய ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைப்பதற்கான அடிப்படையே லா இலாஹ இல்லால்லாஹ் எனும் கலிமாவாகும் இக்கலிமா நமக்கு சொல்வது உண்மையாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதே! இதனையே குர்ஆனும் அதன் தெளிவுரையான ஹதீஸ்களும் பரை சாட்டி நிற்கிறது.

கலிமாவை இலக்கணப்படிதான் அர்த்தம் கொள்ளவேண்டுமா

இஸ்லாத்தின் அடிப்படைக் கலிமா ‘‘லாயிலாஹ இல்லல்லாஹ்’’ என்பதற்கான அர்த்தம் என்ன ? அதற்கான விளக்கம் என்ன? என்பதில் தற்காலத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றியிருக்கின்றன.

1- கலிமாவின் உண்மை பொருளை விளங்குவதற்கு குர்ஆனும் நபியவர்களின் விளக்கங்களும் போதும் என்று சொல்லக்கூடிய நாம் (உண்மையாக வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை ) என்றும்

2- கலிமாவை விளங்கிக் கொள்ள குர்ஆன் கதிஸ்களை விட இலக்கணமே அவசியம் என்று சொல்லக்கூடியவர்கள் ( அல்லாஹ் அல்லாத வேறொன்றும் இல்லை ) எல்லாம் அவனே என்றும் கருத்துச் சொல்கின்றனர்.

அடிப்படைக் கொள்கையில் இரு வேறு பட்ட கருத்துக்கள் இருக்க சாத்தியமில்லை அப்படி இருக்குமானால் இரு கருத்துக்களில் ஒன்றே சத்தியம் மற்றது அசத்தியம் என்பதில் ஐயமில்லை எனவே அசத்தியத்தில் இருந்து சத்தியத்தை பிரித்தரிவது எப்படி ?

இஸ்லாமிய அழைப்புப்பனியை மேற்கொண்ட நபியவர்கள் உம்மி நபி என்பதையும் அன்னலரின் போதனைகளை ஏற்றுக் கொண்ட ஸஹாபாக்கள் கலிமாவை புரிந்து கொள்ளும் விடயத்தில் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருக்க வில்லை என்பதையும் கவணத்தில் கொண்டு விடயத்தை அனுகுவோம்

அசத்தியத்தில் இருப்பவர்களைப்பற்றி அல்லாஹ் சொல்கிறான்

1- எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (4-115)

2- மேலும், எவன் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கிறானோ அவனுக்கு அதற்காக எவ்வித ஆதாரமும் இல்லை அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடம்தான் இருக்கிறது நிச்சயமாக காஃபிர்கள் வெற்றி அடைய மாட்டார்கள். (23 - 117)

மேற்படி நபிகளாரின் போதனைகளையும் இத்திருமறை வசனங்களையும் அடிப்படையாக கொண்டு அசத்திய வாதிகளின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம் அதில்

முதல் விடயம் : அசத்திய வாதிகளிடம் தங்களின் கொள்கைக்கு ஆதாரம் இருக்காது

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே இதுவே பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லக்கூடியதாக உள்ளது.
அதன் அடிப்படையில் கலிமா ( லா இலாஹ் இல்லல்லாஹ் ) என்பதற்கு அர்த்தம் சொல்லுாம் விடயத்தில் நாம் கொண்டிருக்கும் பிரச்சினைக்கு அவ்விரண்டுமே தீர்வு சொல்ல வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை

அந்த வகையில் ( அல்லாஹ்வை அன்றி உண்மையாக வணக்கத்திற்குரிய நாயன் யாரும் இல்லை ) என்பதே குர்ஆன் ஹதீஸ்கள் சொல்லும் விளக்கமாகும் என்று ஆதாரங்களின் அடிப்படையில் சொல்லி வருகிறோம்.
எனவே கலிமாவிற்கு அர்த்தத்தை எவர் குர்ஆன் ஹதீஸ்களில் இருந்து கொண்டு வர வில்லையே அவர்கள் வழி கேட்டில் உள்ளார்கள் என்பதை குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது.

இரண்டாவது விடயம் : ‘‘ நபியவர்களினதும் அவர்கள் வழியில் நடந்த முஃமின்களினதும் வழியை விட்டும் தூரமாயிருப்பார்கள்

அதாவது நபியவர்களோ ஸஹாபாக்களோ அவர்களின் வழிகாட்டல் நடந்த முஃமின்களோ இவர்களில் யாராவது கலிமாவிற்கான விளக்கத்தை இலக்கணத்தின் அடிப்படையில்தான் சொன்னார்களா ? நிச்சயமாக இல்லை ஆக நேரான வழியை விட்டும் தடம் புரண்டவர்கள் யார் ?? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்

மூன்றாவது விடயம் : ‘‘ நேர் வழி இன்னதுதான் என்று சொல்லப்பட்ட பின்னரும் நாம் சொல்வதே சரி என்று தம் மனோ இச்சைக்கு கட்டுப்படுவார்கள்

இன்று கலிமாவின் விளக்கம் (அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குரிய கடவுள் வேறில்லை) என்பதை குர்ஆன் கதீஸ்களின் அடிப்படையில் நாம் எடுத்துக்காட்டியும் எதையும் பொருட்படுத்தாமல் தான் சொல்லும் விதத்தில் மட்டுமே அர்த்தம் எடுக்கப்பட வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருக்கிறார்கள்

இவர்களைப்பற்றி அல்லாஹ் சொல்லும் போது ‘‘ அவர்களை அவர்களின் வழியிலேயே செல்லவிட்டு அப்படியே நரகத்தில் கொண்டு சேர்ப்போம் என்பதாக கூறுகிறான்.

இதன் பின்னும் இவர்கள் புத்துணர்வு பெற வில்லை என்றால் அவர்களின் நேர்வழிக்கு அல்லாஹ்வே போதுமானவன்

இருந்து அவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகளை முன் வைப்போம் சிந்தித்து பதில் தருவார்கள் என்ற நம்பிக்கையில்
1- கலிமா என்பது திருமறை வசனங்களின் ஒரு பகுதியே ஆகம் திருமறை வசனம் ஒன்றுக்கு திருமறையின் மற்றய வசனங்கள் விளக்கமாக இருக்காதா ? விளக்கமாக இருக்கும் பட்சத்தில் ஏன் அந்த விளக்கத்தை நாம் முற்படுத்தக்கூடாது

2- கலிமாவிற்கான அர்த்தம் குர்ஆன் கதீஸை விட இலக்கண ரீதியில்தான் புரிந்து கொள்ளப்படும் என்றால் அந்த முறையை நபியவர்கள் காட்டித்தந்தார்களா ?

3- ஸஹாபாக்கள் மற்றும் நல் வழி நடந்த முஃமின்கள் இலக்கணத்தைக் கொண்டுதான் கலிமாவின் அர்த்தத்தை புரிந்து கொண்டார்களா ?
4- எல்லாவற்றுக்கும் மேலாக கலிமாவை (திருமறை வசனங்களை) புரிந்து கொள்ளும் முறைகளில் இலக்கண அடிப்படையே முதன்மையானது என்று எங்கையாவது சொல்லப்பட்டுள்ளதா ?

செவ்வாய், 12 நவம்பர், 2013

கலிமா விளக்கம்

(لا إله إلا الله )
என்பதன் பொருளும் விளக்கமும்
இக்கலிமாவுக்கு மூன்று முறைகளில் அர்த்தம் சொல்லப்படுகிறது

   -1அல்லாஹ்வை அன்றி உண்மையாக வணங்கப்படும் (கடவுள்) இல்லை

    2அல்லாஹ்வை அன்றி வழிபாட்டிற்குறியவை இல்லை

  3அல்லாஹ்வை அன்றி இரட்சகன் இல்லை

இம்மூன்று அர்த்தங்களில் சரியானதும் மிகச்சிறந்ததும் முதலில் உள்ளதாகும். இக்கருத்தையே அல் குர்ஆன் பல இடங்களில் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறது



( குறிப்பு 

கலிமாவிற்கான விளக்கம் திருமறையில் கிடைக்கும் போது அது குறித்து தெரிந்து கொள்ள வேறு (தர்கீப் ) பக்கம் செல்வது அவசியமற்றதாகும்)

  (- உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.(1:4)


*- அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். (17:23)

  இது (ஏனெனில்); நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை (இறைவன்) மற்றும் அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அது பொய்யாகும்; இன்னும்; நிச்சயமாக அல்லாஹ் - அவனே உயர்ந்தவன், மிகவும் பெரியவன். (22:62)

இது போன்ற பல வசனங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எதனையும் வணக்கத்துக்குறியதாக (கடவுளாக) எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை உணர்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் தன் சமுகத்தாரைப் பார்த்து மக்களே (லா இலாஹ இல்லா அல்லாஹ் ) அல்லாஹ்வை அன்றி உண்மையாக வணங்கப்படுபவை இல்லையென்று சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள் வெற்றி பெருவீர்கள். என்று அழைப்பு விடுத்த போது அம்மகளால் நபியவர்கள் பல எதிரப்புகளை சந்திக்க வேண்டி இருந்தன, காரணம் (லா இலாஹ இல்லா அல்லாஹ்) என்பதன் பொருளையும் அதன் தத்துவத்தையும் அன்றைய காபிர்கள் அறிந்து வைத்திருந்ததேயாகும்.

மரம், செடி, கொடி, கற்கள் மற்றும் சிலை வணக்கமென எதன் மீது தங்களின் மூதாதையர்கள் இருந்து வந்தார்களோ, அவர்களினுடைய வழிமுறையை முற்றிலும் எதிர்ப்பதாக இவருடை மாரக்கம் இருக்கிறது என்பதை காரணம் காட்டியே அன்றைய காபிர்கள் அன்னலரை எதிர்த்தார்கள்.

இது பற்றி அல்லாஹ் தன் திருமறையில்

  "ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?" என்றும் அவர்கள் கூறுகிறார்கள். (37- 36)

  (அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர் ''இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்'' என்றும் காஃபிர்கள் கூறினர். ''இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்). (38:4-5)

முஹம்மத் (ஸல் ) அவர்களுடைய கொள்கை தம்முடைய தெய்வங்களை பொய்பிக்கக்கூடியதாக வணக்கங்கள் யாவும் ஓரே இறைவனான அல்லாஹ்வுக்கு மாத்திரமே செலுத்தப்பட வேண்டுமென சொல்லக்கூடியதாக உள்ளது என்பதை புரிந்து கொண்டதன் காரணமாகவே அக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் முழுமையாக சிலை வணக்கங்களை விட்டும் தூரமாகி தங்களின் முழு வணக்கங்களையும் தூய்மையான முறையில் அல்லாஹ்வுக்கு மாத்திரமே என்று ஆக்கிக் கொண்டனர்

அவ்வாறில்லாமல் (லா இலாஹ இல்லா அல்லாஹ் ) என்பதன் அர்த்தம்
அல்லாஹ்வை அன்றி இறட்சகன் இல்லை எல்லாம் அவனே என்று புரிந்து வைத்திருந்தால் நிச்சயமாக நபி (ஸல்) அவர்களின் அழைப்பிற்கு அவர்கள் எவ்வித எதிர்ப்பையும் காட்டிருக்க மாட்டார்கள்

ஏனெனில் அல்லாஹ்வே தங்களின் இரட்சகன் அவனே படைப்பாளன் அனைத்தும் அவனிடமிருந்தே உள்ளது என்று, அக்காபிர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அத்துடன் சிலைகள், மரங்கள், நல்லடியார்கள், மலக்குகள், போன்றவைகளை தங்களின் துணைவர்களாகவே எடுத்துக் கொண்டனர். காரணம் அவைகள் தங்கள் இரட்சகனிடத்தில் தங்களுக்காக பரிந்து பேசும் என்று நினைத்துக் கொண்டதனாலாகும். இதையே குர்ஆன் இனை வைப்பு என்கிறது.

இதனை பின் வரும் வசனம் சுட்டிக் காட்டுகின்றது
*- (அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ''அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை'' (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். 39:3

அன்றை காபிர்கள் தங்களின் இறை கொள்கையில் கொண்டிருந்த தவறான விளக்கங்களைச் சுட்டிக்காட்டும் மேட்படி வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் அழைப்புப்பணியும் (லா இலாஹ இல்லா அல்லாஹ் )என்ற கலிமாவின் சரியான அர்த்தம் அல்லாஹ்வையன்றி உண்மையாக வணக்கத்துக்குறிய கடவுள் வேறில்லை என்பதையே சுட்டிக்காட்டி நிற்கிறது.

எனவே குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் புரியப்பட்ட அர்த்தத்தை விட்டும் எவர் தூரமாகின்றாரோ நிச்சயமாக அவர்கள் தங்களின் மனோ இச்சைக்கு கட்டுப்படுகிறார்கள் என்பதை தவிர வேறில்லை

இவர்களைப்ற்றி அல்லாஹ் சொல்கிறான்
(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? (45- 23)

எனவே
لا إله إلا الله
என்பதற்கு அல்லாஹ்வை அன்றி உண்மையாக வணங்கப்படுபவை இல்லை என்ற கருத்தையும் விளக்கத்தையும் தவிறவுள்ள அனைத்தும் நிராகரிக்கப்பட வேண்டியதே

எல்லா புகழும் அல்லாவுக்கே 

சனி, 9 நவம்பர், 2013

அல்லாஹ்வே எல்லாமாயும் இருக்கிறானா

அத்வைதம் பேசும் நம் சகோதரர்கள் தங்களின் கொள்கையை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் எடுத்துக் கொள்வதை விட்டும் தூரமாகி தங்களின் மனோ இச்சைப்படியின் அடிப்படையில் தங்களுக்கென ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள்

அதில் ஒன்றுதான் கலிமா ( லா இலாஹ இல்ல அல்லாஹ் ) என்பதற்கான விளக்கம் ஆகும். அல்லாஹ்வை அன்றி கடவுள்கள் இல்லை , அல்லாஹ்வே எல்லாமாயும் அவன் இருக்கிறான் எல்லாம் அவனே எனும் தத்துவத்தை கலிமாவிற்கான விளக்கம் என்று அவர்களால் முன் வைக்கப்படுகிறது

மேற்படி அரத்தத்தை அரபு இலக்கண (தர்கீப் ) சட்டப்படியே கொடுத்துள்ளார்கள் என்பதை அவர்களின் எழுத்துகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த வழிமுறையைதான் இஸ்லாம் காட்டித்தருகிறதா ? இதன் அடிப்படையில்தான் விளக்கங்கள் கொடுக்கப்பட வேண்டுமா ?

இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆன் மற்றும்
ஹதீஸ்களே இவ்விரண்டிற்கும் விளக்கங்கள் சொல்லப்படுவதற்கென்று நமது முன்னோர்களால் சில வழி முறைகளும் ஒழுங்குகளும் காட்டித்தரப்பட்டுள்ளன. அந்த வகையில் தப்ஸீரினுடைய உலமாக்களால் குர்ஆனிய வசனங்கள் எவ்வாறு விளக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை (அடிப்படைகளை) மிக தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள்

எனவே அத்வைத வாதிகளால் கலிமாவிற்கு சொல்லப்படும் விளக்கமானது குர்ஆனை விளக்குவதற்கான வழிமுறையில் உள்ளதுதானா ? என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என்பதே விடையாக இருக்கும்.

குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கப்படும் வழிமுறைகள் அதில் முற்படுத்தப்பட வேண்டிய ஓழுங்கு முறைகளும்.

1- குர்ஆனிய வசனம் ஒன்றுக்கு முதல் முதலாக குர்ஆனில் இருந்தே விளக்கம் சொல்லப்பட வேண்டும் குர்ஆனில் விளக்கம் கிடைக்க வில்லையானால்

2- இரண்டாவதாக ஹதீஸ்களைக் கொண்டு விளக்கம் சொல்லப்பட வேண்டும் ஹதீஸ்களில் விளக்கம் இல்லாத போது

3- அடுத்ததாக ஸஹாபாக்களின் கூற்றுகளைக் கொண்டு விளக்கம் கொடுக்கப்படல் வேண்டும் ஸஹாபாக்களிடத்திலும் கிடைக்க வில்லையானால்

4- தாபியீன்களிடம் அல்லது தலைசிறந்த உலமாக்களிடம் இருந்து விளக்கம் சொல்லப்பட வேண்டும் அதுவும் கிடைக்க வில்லையானால்

5- அரபு இலக்கணங்கள் நன்கு அறிந்த விளக்கமுள்ளவரிடத்தில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்.

இதுவே குர்ஆனுக்கு விளக்கம் சொல்லப்படும் வழிமுறைகளாகும்.
இதன் அடிப்படையில் அத்வைத வாதிகளின் விளக்கம் சொல்லும் முறையை பார்க்கும் போது முதல் நான்கு நிபந்தனைகளையும் கண்டுக்காமல் இருதியான வழி முறைப்படியே அர்த்தம் கொடுக்கிறார்கள் . என்பது தெளிவானதொரு விடயமாகும்
இதற்கு காரணம் அவர்களின் மனோ இச்சைதான் என்பதில் எல்லளவும் சந்தேகம் இல்லை.

முன்னைய உலமாக்களின் அல்லது ஸஹாபாக்களின் வழி முறையில் குர்ஆனுக்கு அவர்களால் விளக்கம் சொல்லப்படும் போது தங்களின் கொள்கைக்கு அது வேட்டாக அமையும் என்பதனாலேயே இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் ஆகவே தெளிவான வழிகேட்டில் சென்று கொண்டிருக்கும் அவர்களின் கொள்கை இஸ்லாம் அல்ல என்பதை நாம் கவணத்தில் கொள்ள வேண்டும்

இன்ஷா
அல்லாஹ் மற்றும் ஒரு பதிவில் கலிமாவிற்கான சரியான அர்த்தம் என்ன என்பதை குர்ஆனிய வசனங்கள் கொண்டே விளக்குவோம்.

தொடரும் .........

வியாழன், 7 நவம்பர், 2013

வழிகெட்ட வஹ்தத் அல் வுஜுத்


வஹ்ததுல் வுஜுத் :   
என்றால் உள்ளதை ஒன்றாக்கி வைத்தல் அல்லது  இவ்வுலகில் அல்லாஹ்வைத் தவிற வேறொன்றும் இல்லை, நாம் காணும் யாவும் அல்லாஹ் ஒருவனே அவனே அனைத்துமாக இருக்கிறான் என்பதாகும். இந்த தத்துவத்தின் பின்னனியில் உருவான கொள்கையே வஹ்த்துல் வுஜுத் எனும் அத்வைதம் ஆகும. இது முற்றிலும் இஸ்லாத்திற்கு புறம்பான கொள்கையாகும் என்பதை குர்ஆன் ஹதிஸ்களினூடாக புறிந்து கொள்ளலாம்.

அத்வைதத்தின்
முதல் ஆதாரம் :

“யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே பிந்தியவனும் அவனே பகிரங்கமானவனும் அவனே அந்தரங்கமானவனும் அவனே” (57- 03 )

அத்வைதம் பேசக்கூடியவர்கள் எடுத்து வைக்கும் தலையாய ஆதாரமாக இது இருக்கிறது இதற்கு அவர்களின் விளக்கம் இதோ : அல்லாஹ் ஆரம்பமானவன் என்றால் உலகைப்படைக்கும் முன் அவனையன்றி இவ்வண்டத்தில் எதுவுமில்லை , அவனில் இருந்தேயல்லாமல் எந்த ஒரு படைப்பும் படைக்கப் பட்டிருக்க முடியாது எனவே படைப்புகள் அனைத்தும் அவனுடைய பிரதிபளிப்பேயன்றி வேறில்லை என்பதினூடாக எல்லாம் அவனே என்ற தத்துவத்தை முன் வைக்கிறார்கள்

இவர்களுடைய இந்த விளக்கம் தவறானது என்பதை பின்வரும் சில அடிப்படைகள் மூலம் புரிந்து கொள்ளலாம்

முதல் அடிப்படை :
திருமறையில் (படைப்பாளன்) அல்லாஹ்வும் அவன் படைப்புகளும் வேறானவை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

“உங்களை அல்லாஹ்தான் மன்னிலிருந்து படைத்தான்” (35-11)

“மேலும் எல்லா உயிர்ப்பிராணிகளையும் அல்லாஹ் நீரில் இருந்து படைத்துள்ளான்” (24-45)

“நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமான ஒரு அளவின் படியே படைத்துள்ளோம்” (54-49)

இது போன்ற வசனங்கள் படைப்பாளனையும் படைப்புகளையும் வேறுபடுத்திக் காட்டும் போது இவர்களால் எல்லாம் அவனே என்ற தத்துவத்தை தங்களின் மனோ இச்சைப்படி சொல்கிறார்களே தவிற வேறில்லை ...

இரண்டாவது அடிப்படை :
திருறையில் அல்லாஹ் தனக்குறிய பன்புகளைக் கொண்டு தன்னை அறிமுகப்படுத்துவது போன்று இந்த வசனத்திலும் அவனுக்குறிய பன்புகளையே குறிப்பிடுகிறான் ஆகவே அத்வைத வாதிகளால் ஆதாரமாக எடுத்து வைக்கப்படும் மேற்படி வசனத்திற்கு இவர்களால் கொடுக்கும் வலிந்துரை நிச்சயம் தவறானதே.

உதாரணம் :
“அவன் நித்திய ஜீவன் என்றும் நிலைத்திருப்பவன்” (03-02)

நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன் மிகைத்தவன் (11-65)
இவ்விரு வசனங்களில் அல்லாஹ் தன்னை நிலையானவன், வல்லமை மிக்கவன் என்ற பண்புகளில் குறிப்பிட்டுக்காட்டுகிறான் முன்னைய வசனமும் அவனுடைய பண்புகளையே சொல்லித்தருகிறது என்பதை புரிந்து கொள்ள தவறி விட்டார்கள்.

எனவே மேற்படி வழிந்துரை கொடுக்கப்பட்ட வசனத்தை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது :

** யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே: அவனுக்கு முன் எதுவும் இல்லை என்றும்

** பிந்தியவனும் அவனே : அவனுக்கு பின்னர் எதுவும் இல்லை என்றும்

** பகிரங்கமானவனும் அவனே : தன்னுடைய வசனங்கள், அத்தாட்சிகள் மூலமும் பகிரங்கமானவன் அவனே.

** அந்தரங்கமானவனும் அவனே: இவ்வுலகில் எவரும் பார்க்க முடியாதலவில் மறைக்கப்படிருப்பவனும் அவனே.

இந்த அடிப்படையில் சாதாரணமாக யாவரும் புறிந்து கொள்ளும் வசனத்தைக் தங்களின் கொள்கைக்கு ஏற்றவாறு கருத்தை மற்றி வைத்திருப்பது மட்டுமன்றி அவ்வசனத்திற்கு முன்னும் பின்னும் உள்ள வசனங்கள் அல்லாஹ்வையும் அவனது படைப்புகளையும் வேறு படுத்திக் காட்டி அத்வைதத்தை மறுத்துக் கொண்டிருப்பதை கவனிக்கவும் தவறி விட்டனரை்.

அத்வைதம் பேசுபவர்களால் தங்களின் கொள்கைக்கு ஆதாரமாக எடுத்து வைக்கப்படும் வசனங்களே அவர்களின் கொள்கைக்கு எதிராக வந்தமைந்துவிடுகின்ற நிலமையை இன்ஷாஅல்லாஹ்  எமது எதிர் வரும் மறுப்புகளில் காணலாம். அத்வைதம் பற்றி அறிமுகத்திற்காக ஒரு ஆதாரத்துடன் இக்கட்டுரையை முடித்துக் கொள்கிறேன் . எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் உண்மையை ஏற்றுக் கொள்ளும் உள்ளத்தையும் தந்தருள்வானாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும் ................